வெற்றி வெகுதூரத்தில் இல்லை.
வெற்றி என்றும் தொலைந்து போவதில்லை.
வெற்றி என்றும் உன் அருகிலேயே உள்ளது.
அருகில் உள்ள வெற்றியை நீ அறிந்து கொள்ளவில்லை.
அறியாமையோ, அன்றி அவநம்பிக்கையோ,
புரியாமையோ, அன்றி புகுந்து செல்லாமையோ,
எல்லாவற்றுள் எதோ ஒன்று கண்ணைக்கட்டியது.
எனவேதான் அருகில் இருந்தும் அறியாதிருந்தாய்!
காரியம் அறிந்து அதன் கருத்தினைப் புரிந்து,
வீரியம் மிகுந்து சீரிய நோக்குடுன்
கடமை ஆற்றுக; உடனே,
வெற்றி உன் அருகிலேயே நிற்கும்.
அதுவும் சோம்பேறியாய் சும்மா நிற்கிறது!
உன் பெருமையை உலேகிற்கே சொல்லும்.
பாலு குருசுவாமி.