நட்பென்ற ராஜபாட்டையில்
நம்மை பற்றி
நமக்கு பின்னால்
தவறாக பேசுகிறார்கள்
என்று கலங்கிய கண்ணீருடன்
நின்றேன் . . .
கண்ணீரை துடைத்து விட்டு
திரும்பி பார்
நம் நட்பு அவர்களின்
வார்த்தைகளை கொன்று
கொண்டிருக்கிறது என்றாய் . . .
நிமிர்ந்து நடந்தேன்
நட்பென்ற ராஜபாட்டையில் . . .

