சத்திய மேவே ஜயதே
உரிமைகேட்கும்
உணணாவிரதம்
தேவையில்லையடா!
உரிமைகொடுக்கும் உரிமையாவது
கொடுங்களடா!
புறமுதுகில்
ஒரு அம்பு
பாய்ந்தாலும்,
உன்
மார்பைத்தைத்த
ஆயிரம் அம்புகளும்
தோற்றுவிடுமடா!
சத்தியம்
செத்துவிட்டதென்று
சத்தியம்
செய்தவனும்
செத்துவிட்டானேடா!
கொதித்து
எழுந்தவனையெல்லாம்
அடக்கம் செய்துவிட்டு
ஆடுகிறதடா
அரசியல் சித்தாந்தம!
கஜானக்களில்
கட்டிவைத்த
நோட்டுகளெல்லாம்
கட்சிக்கொடி
தூக்கிநிற்கிறதடா!
கஜானாக்கள்
நிரம்பி வழிவதனால்
காலிப்பணியிடங்கள்
எல்லாம்
கூலிப்படைஇனங்கள்
அமைக்கிறதடா!
தலையாட்டி
பொம்மைகள்
தலையாட்டாவிட்டால்
தலையைவெட்டி
தலைமைச்செயலகம்
அமைப்பது
அரசியல் தத்துவமடா!
ஆதங்கம்!ஆதங்கம்!
ஆவேசம்!ஆவேசம்!
யார் உன்னை
வேண்டாமென்றது.
குடும்பம் குழந்தை என
இன்னும் எத்தனை
நாள் வாழப்போகிறொம்.
வீரப்பெருந்தலைவர்கள்
குடும்பம் குழந்தையென
நினைத்திருந்நால்
நாம் இன்னும்
அந்நியர்களின்
ஆட்டத்தில் அடங்கி
இருக்கவேண்டும்!
மீண்டும் அந்த
சடலங்களின் மடியில் தான்
தலைவைத்திருப்பொம்!
அரசியல்சாக்கடை என
நீயாய்
நினைத்துக்கொண்டால்
உரிமைகேட்டு
கெஞ்சிக்கொண்டுதான்
இருக்க வேண்டும்.
ஆம்.
அரசியல்சாக்கடை
இல்லையென்றால்
டீக்கடை கூட
நிலைத்திருக்க நிமிடங்கள்
இல்லை.
அரசியலால் தீவிரவாதிகள்
உருவாக்கபடுகிறார்கள்
என்றால்
ஒவ்வொரு அரசியல்
வாதியும்
தீவிரவாதியே!
கைது செய்யவேண்டும் என்றால்
அம்பேத்காரையும்
சேர்த்து
கைது செய்ய வேண்டும்!
ஆரம்பகால அரசியல்
வேறு!
இன்றைய அரசிமல்
வேறு!
ஆட்டை மேயப்பதற்க்கு
ஐய்யாயிரம்
தேவையானால்
நாட்டை மேய்ப்பதற்க்கு
ஐய்யாயிரம் கோடிகள்
போதாது!
ஊழல் நடந்தாலும்
எனக்கு சம்பளம்
கிடைக்கிறதென்று
உதாசினப்படுத்துவது
உரிமையில்லை!
தட்டிக்கேள்!
யார் உன்னை
வேண்டாம் என்றது!
உனக்கு பதவி
கிடைத்தால் பக்குவயாய்
பயன்படுத்திப்பார்.
ஒரு வீட்டில்
ஒரு இளைஞன் படிக்கும்
காலத்தில் சமுதாய அவலங்களைபார்த்து
தனக்குள் ஒரு இலட்சியம் வைத்துக்கொள்கிறான்.
நொந்துகொள்கிறான்.
நேர்மையை மட்டும் மனதில்
உறுதி
படுத்திக்கொள்கிறான்
படிப்பை முடித்து
பதவிக்கு செல்லும்
வேளையில்
அந்த பதவியை வாங்குவதற்குள்
எத்தணை லஞ்சங்கள்
எத்தணைமறுப்புகள்
எத்தணை
அவமானங்கள் இத்தணையையும் தாண்டி வந்த அந்த இளைஞன் பதவி
பெறுகிறான் என்றால்
அவன் அன்று நினைத்த
நேர்மையான எண்ணம் இந்த நொடிப்பொழுதில்
இருக்குமா?
எவனொருவன்
இலட்சியம் அல்லாது
சத்தியத்தையும்
அதன் சபதத்தையும்
நிறைவேற்றுகிறானோ
அவனே ஒரு தாயின்
பிள்ளை.
(நான் ஒரு தாயின்
பிள்ளைதான்
இப்போதும் தயாராகத்தான்
இருக்கிறேன்
யார் வந்து
காந்தியும் அல்லாது
அவரைப்போல்
எந்த ஒரு சூழ்நிலையிலும்
தன் நிலை மாறாது
சத்தியத்தை நிலைநாட்ட
சபதம் எடுத்து வருகிறார்களோ
அவர்களுக்காக
என் உயிரையும் கொடுக்க தயார்.
இந்நொடிப்பொழுதிலும்
எந்த இடத்திற்க்கு வரவேண்டும் என்று
சொல்லுங்கள்
இணைவோம்.)
(தம்பி,திருடர்கள் ஜாக்கிரதை)

