முதல் சந்திப்பு
உன் கைப்பிடிக்குள்
அடங்கி இருந்தாலும்
நாம் கணவன் மனைவியாக
கலந்திருந்தாலும். நான்
நேசிப்பதென்னவோ!
வார்த்தைகள் கைவிட
வெட்கம் நம்மை கட்டி போட
பார்த்தும் பாராமல்
பேசியும் பேசாமல்
மௌனத்தில் கரைந்து போன
நம் முதல் சந்திப்பு தான்.

