மோவாய் முத்தம்!

இரு க்கை அவளது மேனியை
இருக்க அணைக்க எண்ணியே ....

இரு க்கை அவளது மேனியை
இருக்க அணைக்க எண்ணியே
இலைமறை காய்ப்போல் தயங்கும்,
இதழ் சுழித்து, மடித்து
இதயம் துடித்து, துயலும்
இச்சை, பிச்சை வேண்டி
பசித்த தேக தேடலில் -
ஒள்ளமர்க் கண்ணாள்
பக்கம் வந்தமர்ந்தேனே.

இரு க்கை அவளது மேனியை
இருக்க அணைக்க எண்ணியே ....

நுதல் பதிதென் இதழ்,
நாவைசுழற்றி, கீழிறங்கி
விழிகள் இரண்டில், ஒன்றின்மேல்
வெட்டுதட்டு வெதுமை தீர்த்து,
குழியமைப்பு குழியின்மேல்
குத்தவைத்து குடிபெயர-
மறுத்தே, இதழோடு - இதழ்
பிணைந்து, எச்சிலோர்
குளம் அமைத்து, நீந்தி-
சேரா, நாபடகில் பயணித்தே
பாற்கடல் அமிழ்தினை பருக
மோவாய் முத்தம் முற்றும்.

இரு க்கை அவளது மேனியை
இருக்க அணைக்க எண்ணியே....

பலுங்கி கல் கழுத்து வழுக்கி
பருவத்தோள் பரவியே இதழும்
நெருங்கிட முயலும் வலக்கை
மென்மை மேனி , மடந்தை
மேலாடை மறைத்த கொங்கை-
அலைத்திமில், அதன்மேல் என்கை,
படர்ந்த கொடிபோல் நெளிந்து
நுழைய திறந்த குகைவாயில்
புகுந்து பற்றி கூர் நசுக்க
நெளிந்த பாம்பாய், தெரிவை.

இரு க்கை அவளது மேனியை
இருக்க அணைக்க எண்ணியே....

பொருக்கா இடக்கை, பொறுத்து-
வெதும்பி, அகடு இடம்பெயர்ந்து
உந்தி துளை உறிய, மோக தீ
பற்றியே அவளும், துடிக்கும் நொடிக்குள்
உதரம் கடந்து புணர்குழை தீண்ட
நெருப்பினுள் இட்ட புழுவோ, அவளும்
நெளிந்து, ஒடிந்து மடிந்திடும் நிலைக்கு
செல்லவதற்கு சற்றே, களையா
விட்ட துகில் கலைத்தேன்
ஒன்றாய், இரண்டாய், முழுதாய்
முற்றிலும் ஆனாள் முழுநிலவாய்

இரு க்கை அவளது மேனியை
இருக்க அணைக்க எண்ணியே...

இரவை தழுவும் நிலவும்
என்னை தழுவிய அவளும்
இருட்டில் கிடைத்த வரமோ ?
தயக்கம் கடந்த களவியில், கற்பனை
கவியேற்றி கரைதெரியா, கடல்நடுவே
சிக்குண்ட ஓடமாய், எல்லையில்லா
இன்ப நீந்தலில் சிதறிய நீர்
உயிர் பெறுமோ புதுஉறவாய்
அவள் வடிவில் ?

இரு க்கை அவளது மேனியை
இருக்க அணைக்க எண்ணியே....

எழுதியவர் : எழுத்தோலை, கோ.இராம்குமார். (9-Jun-12, 12:06 pm)
பார்வை : 445

மேலே