எழுத்தோலை - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  எழுத்தோலை
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  18-Aug-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jun-2012
பார்த்தவர்கள்:  290
புள்ளி:  160

என்னைப் பற்றி...

தமிழனாய் பிறந்ததிலும், தமிழனாய் இருப்பதிலும், மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்,
தமிழ் பால் கொண்ட அன்பின் காரணமாய், எனக்குள் இருக்கும் எழுத்து சித்திரங்களை,
என்னறிவிற்கு எட்டிய சில கற்பனைகளை, இங்கே நான் எழுத்தோலையாய் சமர்பிக்கின்றேன்.

வளர்க தமிழ்! வாழ்க தமிழ்!

To know more about me, Plz follow : http://ezutholai.blogspot.in & http://facebook.com/ezutholai

My email: ezuttholai@gmail.com
Mobile: +918939431936

என் படைப்புகள்
எழுத்தோலை செய்திகள்
எழுத்தோலை - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2015 8:14 pm

நிசப்த இரவை நீவிய தென்றல்
வசம், என் வசம் வாசனை மல்லிகை
முழம் மூன்றை முகத்தினிற் அருகே
தோய்த்து தான் ஓய்ந்தும் போனதே..,

சல் சல் கொலுசொலி சினுங்கல்
நில் நில் என்றும் கேளாமல்
தெள் தெள் என்றே தெளித்தே
லேசாய் அச்சத்தை கூட்டுதே..,

வெள்ளுடை, கார்கூந்தல் புகைக்குள் உருவமாய்
மெல்லிடை, மெருகு எடை உருகும் வெள்ளியாய்
பாதங்காணா பறக்கும் அன்னமா தெரியாது
படப்படப்பை இரட்டிப்பு ஆக்குதே....,

வெள்ளி நடுநிசி விடியாது போகுமோ
கொள்ளி கைப்பிடி கருகாமல் புகையுமோ
கள்ளி இவள்யாரோ மோகினியோ மேனகையோ
அழகு தேவதையாய் அச்சத்தை கூட்டுவதேன்..?

#வெள்ளி #நடுநிசி #மோகினி #கொலுசோசை #மல்லிகைவாசம் #தேவதை #அவள்

மேலும்

ரசித்தேன் !! ரசனைக்கான வரிகள் !! வாழ்த்துக்கள் !!! 13-Sep-2015 11:36 pm
எழுத்தோலை - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2015 8:12 pm

இடியுடன் கொடிப்போல் மின்னல் தொடற - அதன்
ஒளியுடன் ஓராயிரம் மழைத்துளிகள் விழவே
விழுந்தயிடம் தவளையதன் தலையும் ஆகவே
தாவியது, ஓடியது தப்பி பிழைத்தே..,
ஓடியது ஒளிந்திடவே இலையின் மறைவே - அங்கே
நின்றிருந்தாள் ஒருத்தியவள் முழுதாய் நனைந்தே
திரும்பியதும் விரும்பிய அவள் வியப்பாய் விழித்தே....,

இது தவளைகளின் தேனிலவு காலம்,
ஆடி, ஆவணியெல்லாம் இவர்களுக்கு பொருந்தாது.

#மழை #தேன்நிலவு #தவளை #கற்பனை #முடிவுஉங்கள்கற்பனையில்

#எழுத்தோலை!

மேலும்

ஹ்ம்ம்ம் .... 13-Sep-2015 11:39 pm
எழுத்தோலை - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2015 8:10 pm

படித்ததில் உதித்தது !

உலர்ந்த வேர்வை உதிர்த்த
உப்பில் சுவைத்தேன் உன்னை
உவர்ப்பும் புளிப்பும் ஒன்றினைந்த
புது சுவையில் சிரித்தாய் பெண்ணே,
வாசம் உன் உடல்வாசம் மட்டும்
பேசும் மழலையாய் என்னுடன்
உவர் வாசமாய் உயர் நேசத்தில்
உடலை விடுத்து உயர் பறக்கிறதே...

#உடல் #வாசம்

#எழுத்தோலை!

மேலும்

எழுத்தோலை - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2015 8:09 pm

மதுவிலக்கு மாத விலக்காய் ஆனது
சிலருக்கு முந்தியும், பலருக்கு பிந்தியும்
ஒருசிலருக்கு மாதங்களாய் தவறியும்
இன்னும் சிலருக்கு நில்லாமல் சிந்தியும்.

#மதுவிலக்கு #மாதவிலக்கு #BanTasmac

#எழுத்தோலை!

மேலும்

மிரட்டல் பார்வை!! 13-Sep-2015 11:42 pm
எழுத்தோலை - எழுத்தோலை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jun-2012 12:06 pm

இரு க்கை அவளது மேனியை
இருக்க அணைக்க எண்ணியே ....

இரு க்கை அவளது மேனியை
இருக்க அணைக்க எண்ணியே
இலைமறை காய்ப்போல் தயங்கும்,
இதழ் சுழித்து, மடித்து
இதயம் துடித்து, துயலும்
இச்சை, பிச்சை வேண்டி
பசித்த தேக தேடலில் -
ஒள்ளமர்க் கண்ணாள்
பக்கம் வந்தமர்ந்தேனே.

இரு க்கை அவளது மேனியை
இருக்க அணைக்க எண்ணியே ....

நுதல் பதிதென் இதழ்,
நாவைசுழற்றி, கீழிறங்கி
விழிகள் இரண்டில், ஒன்றின்மேல்
வெட்டுதட்டு வெதுமை தீர்த்து,
குழியமைப்பு குழியின்மேல்
குத்தவைத்து குடிபெயர-
மறுத்தே, இதழோடு - இதழ்
பிணைந்து, எச்சிலோர்
குளம் அமைத்து, நீந்தி-
சேரா, நாபடகில் பயணித்தே
பாற்கடல் அமிழ்தினை பருக
மோவாய் ம

மேலும்

நன்றிகள் திரு.கவின் சாரலன் 09-Jun-2012 6:15 pm
கட்டியணைத்து தழுவி முத்தமிடும் கட்டில் கலையை காமவிரசம் இன்றி காம சிருங்காரம் பயின்று வர கவிதையில் எழுதுவது கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பாகும் கவின் கவிதையின் சில வரிகளில் கள குடம் உடைந்து ஓடுகிறது செயம் கொண்டாரையும் செயம் கொள்ள முயன்றிருக்கிறீர்கள் இந்திரன் கௌதம முனி வேடத்தில் அகலியை ஏய்த்துப் புணர்ந்தபோது "காம புது மணத் தேறல் என்று ஐயுற்றாளாம் .இது கவிதைத் தேறல் வள்ளுவன் காமக் களவியல் சொன்னான் நீங்கள் காமக் கள்ளியல் சொல்கிறீர்கள் செந்தமிழ் பயின்று வர கவிதை எழுதுகிறீர்கள் அது கவிதையின் தரத்தை இங்கே உயர்த்தும் வாழ்த்துக்கள் எழுத்தோலை கோ இராம்குமார் ----அன்புடன், கவின் சாரலன் 09-Jun-2012 5:36 pm
தங்கள் கருத்துக்கு, மிக்க நன்றி! தோழியே!! 09-Jun-2012 3:33 pm
இரவை தழுவும் நிலவும் என்னை தழுவிய அவளும் இருட்டில் கிடைத்த வரமோ ? தயக்கம் கடந்த களவியில், கற்பனை கவியேற்றி கரைதெரியா, கடல்நடுவே சிக்குண்ட ஓடமாய், எல்லையில்லா இன்ப நீந்தலில் சிதறிய நீர் உயிர் பெறுமோ புதுஉறவாய் அவள் வடிவில் ? மனம் மாறாத மரபு கவிதை. தொடக்கம் முதல் முடிவு வரை சொக்க வைக்கும் சிருங்கார வரிகள். கவிதை அழகு தோழா. 09-Jun-2012 3:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (57)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (57)

karthikjeeva

karthikjeeva

chennai
user photo

Manu

Chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (57)

மேலே