வெள்ளி நடுநிசி

நிசப்த இரவை நீவிய தென்றல்
வசம், என் வசம் வாசனை மல்லிகை
முழம் மூன்றை முகத்தினிற் அருகே
தோய்த்து தான் ஓய்ந்தும் போனதே..,

சல் சல் கொலுசொலி சினுங்கல்
நில் நில் என்றும் கேளாமல்
தெள் தெள் என்றே தெளித்தே
லேசாய் அச்சத்தை கூட்டுதே..,

வெள்ளுடை, கார்கூந்தல் புகைக்குள் உருவமாய்
மெல்லிடை, மெருகு எடை உருகும் வெள்ளியாய்
பாதங்காணா பறக்கும் அன்னமா தெரியாது
படப்படப்பை இரட்டிப்பு ஆக்குதே....,

வெள்ளி நடுநிசி விடியாது போகுமோ
கொள்ளி கைப்பிடி கருகாமல் புகையுமோ
கள்ளி இவள்யாரோ மோகினியோ மேனகையோ
அழகு தேவதையாய் அச்சத்தை கூட்டுவதேன்..?

#வெள்ளி #நடுநிசி #மோகினி #கொலுசோசை #மல்லிகைவாசம் #தேவதை #அவள்

#எழுத்தோலை!

எழுதியவர் : எழுத்தோலை (13-Sep-15, 8:14 pm)
Tanglish : velli nadunisi
பார்வை : 142

மேலே