சமுதாய அவலங்கள் ( கவிதை திருவிழா )
இன்றைய தலைப்பு செய்திகள் ...!
பொதுநல வழக்கொன்றில் ...
கலப்படம் ...பதுக்கல் ...கடத்தல் ..
இனி தேசத்த்ரோக குற்றங்கள்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ...!
உழைப்பாளர் சிலையே ..
இந்தியாவின் தேசிய சின்னம் ...!
உழவுத்தொழிலே ...
நம் நாட்டின் முதன்மைத்தொழில்..
உழைக்கும் விவசாயியே ...
திருநாட்டின் முதல் குடிமகன் ....!
அதிகார துஷ்பிரயோகம் ..
அதிரடி பதவி உயர்வு ...
அகதிகளாய் நாட்டில் ...!
அசையா சொத்துக்கள் ..
நேரடி விற்பனை இனி இல்லை ..
கொள்முதலும் ..விற்பனையும் ..
அரசாங்கத்தின் அலுவல்...!
லஞ்சம் குற்றமா ...
கண்களையும் ...கைகளையும் ..
கையூட்டிர்க்கு பறிகொடுத்த ..
முடவர்களுக்கு கேள்வி ..?
குடும்ப சொத்துக்கள் அனைத்தும்
பொதுவுடைமை ஆக்கப்படும் ..!
அரசியல்வாதிக்கும் ...
கல்வித்தகுதி ..
நல்ஒழுக்க சான்றிதல் ..
கட்டாய ராணுவ பயிற்சி ...
பாராளுமன்றத்தில் சட்டம் ..
ஒருமனதாக நிறைவேறியது ..!
ஆன்மீக கபடதாரிகள் ...
ஆயுளுக்கும் மலமே உணவு ..
ஆயுட்கால சிறையும் இலவசம் ...!
பாலியல் பலாத்காரங்களுக்கு ...
அடையாளம் பறிக்கப்படும் ...
ஆணா..பெண்ணா ..அறியாதவாறு ...!
ஆயுளுக்கும் கைதியாய் ...ஆளில்லா தீவில் ..!
கல்வியும் ..மருத்துவமும் ..நீதித்துறையும் ...
இனி வியாபாரிகளுக்கு இல்லை ....
விற்றால் விடும் மூச்சிற்கு
விடுதலை பெற்று தரப்படும் ..!
திடீரென கொசுகடிக்க ....
உறக்கம் கலைந்தேன் ..
அதிகாலை 4 மணிக்கு ....!
ஐயகோ கனவா இது ...?
அதிகாலை கனவு பலிக்குமாமே .....
நிஜமா யாராவது சொல்லுங்களேன் ...!?