அழகு
அதி காலை
கதிரவன்,
அந்தி மாலை
சந்திரன்,
நம்மை மயக்குவது
அந்தனை அழகு ..!!
மழைத்துளி மண்ணில் பட்டதும்
குளிரும் செடியுலும்
பிரிந்த சேயுடன்
சேரும் தாய்மையுளும்
கொள்ளை அழகு ...!!
ஆடவரை மயக்கும்
பெண்ணின் பார்வையும்
ஆண்மையை போற்றும்
ஆண்ணின் வீரமும்
பேரழகு..!!!
இதுபோல் பல அழகை படைத்தது
புவிக்கு விருந்தளித்த ஆண்டவன்
என் போன்ற சிலரையும் புவியில்
உறவாட விட்டது ஏனோ??!!
அவைகளின் அழகு இன்னும்
அதிகரிபதற்குதானோ
அழகுக்கு அழகு
சேர்க்கதானோ இவன்..??!!
யோகம் என்ற சொல்
எனக்கில்லை வாழ்வில்
அழகு என்ற சொல்
கண்டதில்லை என்னில்
முக அழகை மட்டுமே
காணும் மனிதர்களின்
மத்தியல்
அக அழகை கூட
காண மனம் படைக்க
மறந்த இறைவனை
தேடி இவனது
கால்கள்
என்றும்...என்றென்றும்...