தொலைப்பேசி

உன் செல்நம்பரை சேமிப்பாக்கி உன்
மொழியை -என்
செவிகளுக்கு அடைக்கலமாக்கினேன்

இரவுகளில்
நினைவுகளை நிர்மூலமாக்கி
கனவுக்கு ஓய்வு கொடுத்து
காதோரம் வார்த்தைகளை
மொழிபெயர்த்தேன்

உன்
அழைப்புக்காக காத்திருந்து
மனம் வெந்து
நம்பர் சுழற்றி வீங்கிப்போனது
என் விரல்கள்

உன் முன்னால்
காட்டமுடியாத முகபாவனையை
தனியாக காட்டி வீரம்
பேசுகின்றேன்

தாஜ்மஹாலை
கூட புறம் தள்ளிவிட்டு-என்
காதல் சின்னமானது
கையடக்கத் தொலைப்பேசி

என்
பிறந்ததினத்தை மறந்து போனாலும் உன் செல்நம்பரை
மறக்கமுடியவில்லையே
இருந்தும் வறுமையாகிப்போனது
என் வாழ்வு
உன் அழைப்புக்களில் இருந்து…–
- ஜே. எஸ். ராஜ்-

எழுதியவர் : - ஜே. எஸ். ராஜ்- (22-Jun-12, 11:41 am)
பார்வை : 760

மேலே