பித்தான் துணியில் பத்தாம் அறிவு

மழுவும் தழுவும்.
அவன் விழியில்
இலவும் உலவும்!
சொந்தம் எரியும்
அது
சொப்பனமாய்
தெரியும்!..
உந்தன் விந்தம்
எரியும், அப்போது
உன் பந்தம் புரியும்!
இச்சையும் பிச்சையும்
பிணித்திட்ட
மங்கையும்
நச்சையும் நஞ்சையும்
அறைத்திட்ட
அம்மியும் விம்மியும்
விழுங்கிட விக்கிச்சாகும்,
தொண்டையும்
மண்டையும் கண்டும்,
கடைவாய்க்கஞ்சியும்
கட்டிலை மிஞ்சியும்
கன்னியைக்கெஞ்சியும்
உடல்வினைதீர்க்கும்
கறியின் வீரியமும்
காமக்காரியமும்
சாமம்மேய்த்து
சஞ்சலம் தீர்க்கும்!
பித்தான் துணியில்
கிழிந்து
தொங்கும்
பத்தாம் அறிவும்
பைத்தியம் ஆகும்!
மாமியார் தந்தனவும்
மன்னர் தந்தனவும்
வாங்கித்தின்ன
சோம்பனையும்
சொந்தம் ஆளும்
ஆதினமும்,
அறுந்த விரலும்
அம்மணஆழியும்
உடுத்திக்கொண்ட
மாநிலமும்,
இந்த தமிழகமுமே!
புறம் அம்புக்கும்
அகம் அம்புக்கும்
அர்த்தம் சொன்ன
தாய்நிலமும்,
அந்த ஆதித்தமிழகமுமே!
அறம் நரைத்தும்
பொருள் ,இன்பம்
விரைத்தும்,
சிரைபட்டும்
சீழ்பட்டும்
தமிழ்மறைகள்
இன்பத்தாழிட்டும்
துன்பத்தால் கிட்டும்,
சிறுதுரும்புக்கும்
பெரும்துயரம் எட்டும்
திக்கும் திசையும்
தெரியாமலும்,
தேடிவந்த பொருளும்,
பாடையில்
பள்ளிழுத்துக்கொண்டு
வருமோ!
உன்
பாவச்சாம்பலும்
மோகச்சாம்பலும்
பட்டதும்,
தண்ணீரும்
காயப்புண்ணில்
கெட்டதும்,
கண்ணீர்விட்டு
கரைத்த
கடற்உப்பும்
உன் உடற்காக்கும்!
முழுநரையும் அது
வீதியின் முறையும்,
பாதிநரையும், பாவி
உன்
பாவத்தின் விரயம்!
அரை மயிரும்
அறுத்துவிட்டு
ஆட்சியும் முடித்தும்,
முழுத்துண்டமும்
முடியும் முடிவும்,
கரிச்சூரியனின்
கறியும்,
ஆறுக்கண்டமும்
அரைமயிற்று
துண்டமாகும்.
அதுவும் ஆறடிக்குழி
பிண்டமாகும்!
இனியும் எதுவோ
நான் எழுதிட
எது முடிவோ!