சின்ன...சின்ன...வருத்தங்கள்.

விலை பேசப்பட்ட
திருமணத்தில்...
மூன்று முடிச்சுகளுக்குப் பின்
தனியே
உத்திரத்தில் சிரிக்கிறது...
நான்காம் முடிச்சு.
********************************************
கோனாருக்குப் புரிகிறது...
பசுவின் வலி
பள்ளி சென்ற பையனைக்
காணோம் எனத் தேடுகையில்.
**********************************************
தலை ஏறிய பூக்களுக்கும் தெரியும்..
தாம் கழற்றி எறியப் படுவோம் என.
இருந்தாலும்-
நாருக்குள் சிக்கிக் கொண்ட
வாழ்க்கையிலிருந்து
வெளியேறத் தெரியாமல்
கக்கிக் கொண்டிருக்கிறது
தன் வாசனையைக் காற்றில்.
*****************************************************
நான் எழுதிய கடிதத்தில்..
நீ இருக்கிறாய்,
நீ படிக்கும் கடிதத்தில்தான்
நான் இல்லை.
*****************************************************

எழுதியவர் : rameshalam (28-Jun-12, 9:26 pm)
பார்வை : 363

மேலே