கூண்டில் கிளிகள்
கணினி மூலம் கருத்து பரிமாற்றம்,
செல்ஃபோன் வழியே சண்டை சச்சரவுகள்,
சாட் ரூமில் நலம் விசாரிக்கும் சுற்றமும் நட்பும்.
என்றோ வந்தமரும் குருவிக்காக காத்திருக்கும்
ஒற்றை பனைமரம் போல்,
எப்போதோ வருகின்ற விடுமுறைக்காக
தனிமையில் காத்திருக்கும் உறவுகள்.
கடற்கரையில் நமக்காக காத்திருக்கும் உறவுகளை துறந்து
ஒடி கொன்டிருக்கிறோம் அகப்படாத நண்டுகளின் பின்னால்.
நம் மனதில் சூட பூத்திருக்கும் காதல், கருணை, பாசம் எனும் மலர்களை பார்க்காமலே,
காசெனும் காகித பூவில் கண் மயங்கி கிடக்கின்றோம்.
வாழ்வின் செல்வங்களை செம்மை படுத்த யெத்தனித்து,
வாழ்வதையே மறந்து தான் போய் விட்டோம்.
அன்னை திருநாட்டில் கிட்டாத பொகிஷமோ,
அரபு நாடில் தேடுகிறோம்?
நெல் தீர்ந்து போகும், வேலைகள் தீராது,
கூண்டில் கிளியாய் நாம்!!
______________________
வேலைக்காக குடும்பத்தை விட்டு விட்டு ஆரபு நாடுகளில் பணி புரியும் லட்சக்கணக்கான இந்திய நண்பர்களுக்கு சமர்ப்பணம்
-தமிழ்க்கிருக்கன்.