மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு

மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு

தேகம் எங்கும் ஒரு போகம் கூட
விடாமல் காதல் விதை போட்டவளே

பொறுக்க முடியாமல் புலம்புகிறேன்
வதைக்காதே என்னை
மேலும் விதைக்காதே உன்
காதல் கண்ணை


என் மேனி அழகென்று நீ புகுந்தாயா?
உன் வாடை புதிதென்று நான் தான் நுகர்ந்தேனா?

என் மேனிக்குள் புதைந்தவளே
என் பாணியில் நீ பேசி
என்னை நீ மடக்கி விட்டாய்

என்ன பாணியில் நான் பேசி
உன்னை நான் வசியம் செய்ய

என்னை நீ
புன்னை வண்டு போல் கவர்ந்தாய்
என்னில் ஒரு அழகு உண்டென்றா?
என்னறிவு உன்னை விஞ்சியதென்றா?

இல்லையேல் நான் காதல் ஏழை என நினைத்து
எனை பரிதாபம் கொண்டாயோ?

மீன் வலையில் நீ சிக்கினால்
தப்பிடுவாய் தவறுதலாய்
என் மன வலையை அறுத்துவிட்டால்
இம் மாமிச பிண்டம் வேகுமடி.
உள்ளம் தான் நாடியறுந்து நோகுமடி...

ஒன்று சொல்கிறேன்
உன்னை காதலித்த என்னால்
நிம்மதியற்ற நிலாத் தூக்கமே மிச்சமடி

காதலை உற்பத்திக்கும் போதே
மறப்பதற்கான மாத்திரைகளையும்
விற்பனைக்கு விடு

நிம்மதியற்ற காதலர்களுக்கான
நிறைவினை அளிப்பதற்கு.........

எழுதியவர் : fairoosa (16-Jul-12, 4:47 pm)
பார்வை : 281

மேலே