சருகு

பச்சையம் இல்லாமல்
பட்டுப்போன பச்சை இலை.
மரப் புத்தகத்தில்
கிழிந்து போன
ஒரு பக்கம்.
இறந்த பிறகு
பிறந்த வீட்டிற்கு
உணவாகப் போகும்
மரத்தின் எச்சம்.
இளமைக்கு இடம்விட்டு
இடம் பெயர்ந்து போன
தியாக செம்மம்.
நீ-
சருகான போதும் விறகு
அநேகம் பேருக்கு
உன்னால்தான் சோறு.
நீ-
சருகல்ல சரித்திரம்.
உன் மீதுள்ள ஒவ்வொரு தழும்பும்
உன் தாய்-
மரத்தின் கதை சொல்லும்.
சுசீந்திரன்.