வேண்டுதல் - 1 கதவுகள் திறக்கட்டும்
நேற்றைய கனவினில் - என்
நிம்மதி பறித்தவளே! - நின்
வாய்மொழி கேளாமல் - என்
தாய்மொழி மறந்திருந்தேன்...
யாருக்கும் தெரியாமல்
என்னில் - நான்
இறந்திருந்தேன்...
கனவு முற்றத்தில்
கோலமிட்டவளே - என்
நினைவுகளை மட்டும் - ஏன்
ஏலமிட்டாய்??...
கவிதைக்கு
உருவானவளே! - நீ
என் உயிருக்குள்
கருவானது
உனக்குத் தெரியுமா?
அடியே!
மெல்லவும் முடியவில்லை
விழுங்கவும் முடியவில்லை....
கசப்பான மருந்துதானோ
காதல்!!??...
உன்னை - என்
உள்ளத்தில் ஏந்த
உயிரைத் திறக்கிறேன்
இப்போது...
ஒருமுறையேனும் - என்
முகம் பார்க்க - நீ
விழிதிறப்பது
எப்போது???
விண்ணப்பம் - 1
கவிதைகளின்
வாசல்களை
எனக்குத்
திறந்தவளே!
வா! இருவரும்
இணைந்தே திறக்கலாம் - நம்
வாழ்க்கையின் கதவுகளை..