வாடகை வீடு வேண்டும் !

கூரை வீடுகள்
ஓட்டு வீடுகள்
காரை வீடுகள் என்று
எல்லாம் போய்
நகரம்
கான்க்ரிட் வீடுகளாய்
மாறிய பின்னால்
கரிச்சான் குஞ்சுகள்
வீடு தேடி
வீதி வீதியாய்
அலைந்து திரிகின்றன
வாடகைக்கு இருந்தால்
யாரேனும் சொல்லுங்களேன் !

எழுதியவர் : முத்து நாடன் (26-Aug-12, 1:13 pm)
பார்வை : 222

மேலே