காதலியுங்கள்

மண்ணைக்
காதலியுங்கள்
வயிற்று பசி
தீர்ந்து போகும்

மரத்தைக்
காதலியுங்கள்
ஆரோக்கியத்தை
அள்ளித் தரும்

தண்ணீரைக்
காதலியுங்கள்
தாகத்தை
தீர்த்துவைக்கும்

உண்மையைக்
காதலியுங்கள்
உறக்கம்
நன்றாக வரும்

அமைதியைக்
காதலியுங்கள்
ஆத்மாவுக்கு
ஆனந்தம் தரும்

அன்பைக்
காதலியுங்கள்
நற் பண்பு
நாளும் வளரும்

அப்படியே
அரசியல்வாதிகளே!
மக்களைக்
காதலியுங்கள்
இந்த நாடு
நாசத்திலிருந்து
தப்பிக்கட்டும்

அப்படியே
மதவாதிகளே!
மனிதாபிமானத்தைக்
காதலியுங்கள்
அப்பாவிகள்
அழிவதிலிருந்து
காத்திடுங்கள்

அப்படியே
ஊழல்வாதிகளே!
நியாயத்தைக்
காதலியுங்கள்
பாவம்
இந்த உலகம்
உயிரோடு இருக்கட்டும்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (26-Aug-12, 12:19 pm)
பார்வை : 314

மேலே