ரயில் விபத்து !

நித்தம் ஒரு சேதிகேட்டு என்
நெஞ்சமெல்லாம் சிலிர்க்குதே !
என்ன பாவம் செய்துவிட்டேன்
என் மக்கள் கூட்டம் சாகுதே !

பத்து நிமிட நேரத்துல நெருப்பில்
பஞ்சா கருகி போறதுக்கா ?
பத்துமாதம் பாத்து பாத்து
பெற்றெடுத்தன் ஏன் மக்கா!

கண்ணே மணியேன்னு
நான் வளர்த்ததெல்லாம்
கண் காண முடியா
கரிக்கட்டையா ஆகுறதுக்கா!

ஆணென்ன பெண்ணென்ன
பச்சபிள்ளை தான் என்ன
அத்துணையும் பஞ்சா
பஸ்பமாகி போய்டுச்சே !

பட்டிணத்துக்கு போனபுள்ள
படுக்கையில போயுடுச்சே
பாதையெல்லாம் பார்த்திருந்தன்
பயணம் சொர்கத்துக்கா!

பட்டபடிப்பு படிச்சபுள்ள
பாசத்துல பாத்துபுட்டு
பணிசெய்ய போகயில
பாவிபுள்ள பாதியில போயுடிச்சே!

அத்தானோட வீட்டுக்கு
குடும்பத்தயே அனுப்பிவச்சன்
அக்கா அத்தனைபேரும்
சொல்லாம போனதென்ன ?

அத்தன பேர் அலறல் சத்தம்
ஏன் காதில ஒலிக்கிறதே !

ஏன் மக்களுக்கு ஏற்படும்
நிலையரிஞ்சா மேகம்
நீ கூட கண்ணீர் மழை
காணாம பெய்திட்ட?

தப்பிவர வளிதெரியாம
இருட்டுக்குள்ள தவிக்கவச்சிட்ட
இயற்கையன்ன நீ கூட
மனம்வெறுத்து போயிட்ட

குளிர் மழை காரணமா
சாளரத்த அடைத்திட்ட !
நீ கொஞ்சம் கருணை காட்டிருந்தா
குளிர் மழையதடுத்திருந்தா

ஏன் பாதி மக்கள் பொலச்சிருக்கும்!
ஏன் மக்களுக்கு கண்ணீரஞ்சலி தினம் செலுத்தி
ஏன் கண்ணுல கண்ணீரும் வற்றிடுச்சே !

பாரத தாயா நானிருந்தும்
இன்று பாதிஉயிரா நிக்கிறனே!
ஏன் மீதி உயிரு போயிடுமா
இல்ல போன உயிரு வந்திடுமா !

இன்றைய கால தலைமுறையே
உங்ககிட்ட கொடுத்திட்டன்
பாலாபோகும் பாரதத்த
பண்படுத்த மாட்டீங்களா ?

(கிராமத்து மொழியில் எழுதியுள்ளேன் தேவையான இடங்களில் வார்த்தை இட்டு படிக்கவும் )

எழுதியவர் : கவியாழினிசரண்யா.. (14-Sep-12, 5:39 pm)
பார்வை : 249

மேலே