என்ன விலை தருவேனோ?
உயிர் தந்து உடல் வளர்த்து
உலகம் புரிய வைத்த
உன்னதப் பெற்றோர்!
மென்மையான கண்டிப்போடு
உண்மையான உள்ளன்பை ஊட்டி
உரிமை கொள்ளும் உடன்பிறப்பு!
நடை பயிலும் நாள் முதல்
தடைதனை தகர்க்கும்
தன்னலமற்ற உறவுகள்!
துக்கம் தோறும் பக்கம் வந்து
துயரம் கடந்து உயரம் தொட
தூணாய் துணை நிற்கும் தோழர்கள்!
அன்போடு அறிவையும்
பண்போடு படைப்பாற்றலையும்
பரிசளித்த ஆசிரியப் பெருமக்கள்!
உள்ளம் உடல் உயிர் உட்பட
எனக்கு மட்டும் எல்லாம் தந்து
அன்பில் அடிமைப்படுத்தும்
இல்வாழ்க்கைத்துணை!
இதை விட இனியதை
இனி நான் பெறுவேனோ?
ஈடு இணை செய்ய
என்ன விலை தருவேனோ?