[332 ] வாய்க்காலும்..கால்வாயும்..
சாலைகளில் மரம்நட்டி வாய்க்கால் வெட்டிச்
சந்ததிக்கு நல்லவற்றை அசோகர் செய்தார்!
மாலைகளில் குடிப்பதற்குக் கடைகள் கட்டி
மதுவகைகள் பலஓட வழிகள் செய்தோம்!
ஆலைகளை உண்டாக்கி அதனால் வந்த
அசிங்கங்கள் நதிகளிலும் கலக்க விட்டோம்!
சோலைகளை வீடாக்கி வீதி தோறும்
சுந்தரப்பூங் காவமைத்துச் சோறு பார்த்தோம்!
சாலைகளில் நின்றமரம் அனைத்தும் வெட்டிச்
சாக்கடைகள் ஒழுங்குசெய்யும் வேலை காட்டி
வேலையில்லா அனைவருக்கும் வேலை தந்தோம்!
வேகமுடன் மழைநீர்க்கால் வாயும் கண்டோம்!
ஓலைகளை அனுப்புகின்ற மரங்க ளின்றி
ஒளிந்துகொண்ட மேகங்கள்! மழையோ யில்லை!
சீலமிகு நகரத்தின் சாக்க டைகள்
சீர்செய்தோம்! அதிலனுப்பிச் சிரித்துக் கொண்டோம்!
< 0 >

