நிழலின் மீது வெயிலின் முத்தம் (ஹரி )
"மர" கணவன் மாண்டு விட
"நில" காரிகையாள் நிழல் குழல் இழந்தாள்-ஆயினும்
"மஞ்சள்"பூசி அக்கைம்பேன் மறு மணமுடிக்க கதிர்
"காய்ந்தான்"...! மகிழ் மழைக் கண்ணீர் வராது விழி
காய்ந்தே வீழ்ந்து கிடந்தாள் நில மடந்தை...!
கலங்கும் உடல் பிளவுபட வெடிப்புறவே
உச்சி வெயிலில் இப்போது அவள்
உடன்கட்டை ஏறுகிறாள்.....!
நிழலின் மீது வெயிலின் முத்தம்
நெருப்பாய் சுட இது மனிதனின் குத்தம்......!
=============================================
குறிப்பு :
ஹரிக்கு ஒரு தலைப்பு தருகிறேன் ஒரு கவிதை தாருங்கள் என்றார் தோழி மதி அவர்கள்,
ஒரே தலைப்பில் இருவரும் எழுதலாம் என்று முடிவு செய்தோம், அவர் தந்த தலைப்பு இது,
ஏட்டிக்கு போட்டியாக ஒரு தலைப்பைக் கொடுத்து எழுதுங்கள் ஹரி என்றால் எழுதித்தானே ஆகவேண்டும் எழுதிவிட்டேன்,