சில்லறை வணிகத்தில் நேரடி முதலீடு

நாட்டின்
சுதந்திரத்தை விற்பதற்கு
ஒரு புதிய சந்தை

உயிரை கொடுத்து ,
வெளியே அனுப்பியவனை
கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்

விளைவு
அன்று ஆயுதம் ஏந்தி வந்தவன்
இன்று
அலங்கரிக்கப்பட்ட கடைகள் மூலம் வருகிறான் !

சிறு வணிகனியும்
சில்லறை சேர்த்து வாங்குபவனையும்
இனி
அருங்காட்சியகத்தில் தான் பார்க்கவேண்டும் போல !

யாருக்கு தெரியும் அதிலும் அந்நிய முதலீடு வரலாம் !

அடிமைத்தனத்தின் மீது சிலருக்கு
ஒரு தலை காதல் போலும் ,
வேண்டாம் என விட்டு சென்றவனை
ஓடி ஓடி காதலிக்கின்றனர் !

"சிதம்பர" ரகசியம் என்னவென்று
அந்த காலத்திலும் தெரியவில்லை
இந்த காலத்திலும் தெரியவில்லை !

வெள்ளையனே வெளியேறு என்று
தெரியாமல் சொல்லிவிட்டோம்
வெள்ளை உடை அணிந்தவனே வெளியேறு
என சொல்லியிருக்க வேண்டும்
நிம்மதியாய் இருந்திருப்போம் !

எழுதியவர் : வில்லியம்ஸ் ( விசா ) (21-Sep-12, 9:25 pm)
பார்வை : 180

மேலே