உன் காதல் சொல்ல தேவையில்லை.....

தொலைவினில் நான் நின்றுபார்த்தாலும்
பகைவனை போலவே எனை நீ பார்க்கிறாய்

எண்ணையில் இட்ட கடுகு போலவே பெண்ணே
கடுமுடு என திட்டி வெடிக்கிறாய் வார்த்தைகளை

உன் வம்பே வேண்டாம் அன்பே என்று
உனது தோழியிடம் பேசி நின்றால்
என் கேள்விக்கு நீ எதிர் வாதம் செய்கிறாய்

விழியிலும் மனதிலும் மட்டும்
சுமந்து ஒதுங்கி செல்வேன்
என் எதிரினில் வந்து
எனை ஏன் பின் தொடர்கிறாய் என்றால்
எனக்கென்று தனியாக அன்பே
பாம்பன் பாலமா கட்டமுடியும்

என் மனதிடம் மட்டும்தான்
உன் காதலை சொன்னேன்
நீயாகவே புரிந்து கொண்டது சுலபம் எனினும்
இன்றுவரை உன்னிடம் காதலை சொல்லவில்லை
உன் உள்மனம் என் காதலை அறிந்தும்
மானம் கெளரவம் பார்த்து
எனையும் என் காதலையும் நிராகரிக்கிறாய்..

இறைவனிடம் நாடி முறையிடலாம் என் காதலை
உன் இதயத்தை போலவே என் காதலியே
இறைவனும் கல்லாய் இருப்பதினாலே பெண்ணே
எவரிடம் சென்று முறையிடுவது என் ஆசையை.......

எழுதியவர் : சி.பொற்கொடி (அறியுர்பட்டி- (23-Sep-12, 9:03 am)
சேர்த்தது : porkodi
பார்வை : 153

மேலே