நெருடல்
எத்தனை மேகங்கள் வந்து வந்து கலைந்து
போகின்றன .......
ஆனால் உன் நினைவுகள் மட்டும் வதம்
செய்வதாய் என்னை சுற்றியே வலம்
...
வருகின்றது.
வானில் தோன்றும் நிலவுக்கு கூட ........
அமாவாசை எனும் அவகாசம் உண்டு
மண்ணை முத்தமிடும் மழைத்துளியும்
நீராவியாய் வெளியாவதுண்டு
சதையோடு ஒட்டிய நகமும் சந்தர்ப்பத்தில்
வீழ்ந்து விடுவதுண்டு .
கையோடு சேர்ந்த ரேகையும் சமயத்தில்
தேய்ந்து போவதுண்டு .
கர்ப்பம் கூட ஐயிரண்டு திங்களில்
தொப்புள் கொடியறுத்து குழந்தையாய்
பிரசவமாவதுண்டு.
எந்நிலையிலும் அகலாத இந்நினைவு
எப்போது என்னை விட்டு வெளியேறும்?
ஆன்மா அழியும் போதா?
புரியவில்லை சிலவேளை ............................
ஆன்மாவை அழித்து நினைவு மட்டும்
மேலோங்கி நிற்குமா??????????

