வயதான தாயின் புலம்பல்
தாலாட்டி பாலுட்டி நான்
வளர்தமகன்
என்னை தள்ளிவைத்து விட்டான்
தள்ளாத வயதில் என்னை
தவிக்கவிட்டு விட்டான்
வயத்துக்கு உணவு
வேண்டி நான் இப்போ வாழவில்லை
வறுமைக்கு அஞ்சியும்
இருக்கவில்லை
நான் பெற்ற பிள்ளை அவன்
நல்லது கேட்டது
தெரியாதவன்
எங்கிருந்தாலும்
என்மகன்
ஏழையாய் இருக்ககூடாது
இந்த பூமியிலே
எவருக்கும் அடிபணிந்து அவன்
வாழவும் கூடாது
மனைவிக்கு அஞ்சி
என்னை அவன் மறந்தாலும்
அவன் மகிழ்வோடு
இருந்திடவே
மடிபிச்சை
போடு சாமி