பெண்..

தாயும் அவள் தான்..
தோழியும் அவள் தான்...
அவள் நினைத்தால்
சறாவளியாய் சுழன்று
அழிக்க முடியும்...
தென்றல் போல வீசி
தூங்க வைக்கவும்
முடியும்...
விதியை வென்றவள்
ஒரு பெண்..
கோபத்தால் நாட்டை எரித்தாள்
ஒரு பெண்...
சிகரம் தொட்டாள்
ஒரு பெண்...
நிலவை தீண்டினாள்
ஒரு பெண்...
வேதனைகளை சாதனை
ஆக்குவதும்...
கண்ணீரை முத்தாய்
மாற்றுவதும்
அவள் தான்...
வேலுநாச்சியாரும்,
ஜான்சிராணியும்
அவள் தான்...
மீராவும் அவள் தான்...
துர்க்கையும் அவள் தான்...
கடல் பெற்ற
திருமகளும் பெண் தான்...
கோபம் கொண்டு சுனாமியை,
அழிப்பவளும் அவள் தான்...
இன்பமும் அவள் தான்..
துன்பமும் அவள் தான்..
அவள் தான்
பெண்....

எழுதியவர் : jakir (7-Oct-12, 8:54 pm)
சேர்த்தது : JAKIR
Tanglish : pen
பார்வை : 145

மேலே