* இலங்க வீரகுட்டி இந்தியவில் இருந்து *
* இலங்க வீரகுட்டி இந்தியவில் இருந்து *
எங்க ஊரு உன்னிச்சையப்பா
ஏன்டா தம்பி வந்திருக்க நீ?...
என்ன பத்தி கேளு
என் ஊர பத்தி கேளு!
ஊரா....? நானா ....?
உன்னிச்ச வீரகுட்டி ...
நான் தான்.... 'வட்டவிதணையார்'
நாங்க போடியார் பரம்பர போ
எங்க தொழில் விவசாயம் சாமி
இலங்கயில மட்டகளப்பு ....
அதுக்குள்ள நம்ம ஊர்ல தான்
குளத்து மடையே சிறப்பு
கண்ணனுக்கு எட்டின தூரம்
எங்க பூமி தான்டாப்பா ....
வழிவழியா வாழ்ந்த குடும்பம்
அங்க எங்கள போல ........
பல குடும்பம் வாழ்ந்த பூமி
பச்சை பசேல் என்ற ஊரு- அழகான
குருவி கூடு போல என் குடும்பம்
என் விட்டில ஒரு பிரச்சனையும்
இல்லை போ ....
நாடு இருக்கேய் !!!
ஏன் அது என்ன செய்தது போ ......
அங்க உள்ள மனிசனுக்கு தான்
உடம்பில மதவேறி
புடுச்சு போட்டு ..
இரத்த வாட பிறவு
மண்ணுகே பிடிக்க
தொடங்கின காலமா போச்சு
பிறகு மழை பெய்யல
குண்டு தான் பெஞ்சுது
ஒன்ன இருக்க வேண்டிய
நம்ம பிள்ளைகள் ....
இயக்கின இயக்கங்களோ
பல பேர் ஆச்சு.....
பிறகு என் பிள்ளயில,...-
ஒன்னு அங்கயும்,
ஒன்னு இங்கயுமா
இழுத்துட்டு போட்டானுகள் அப்பா
முள்ளிவாய்கால் தொடங்க முன்ன
எங்க ஊர்ல எங்கள ....
முதுகிலயேய் அடிச்சு முள்ளு குத்த
ஓட வச்சனுகள் - அந்த
காட்டாமிகள் ......
வீட்ட மூட இல்ல
மாட்ட கட்ட இல்ல
அரிசி உலயில..........
பச்சை பிள்ளைக்கு பால்
பெட்டியும் எடுக்க இல்லை
எங்க குலசாமியயேய் மிரிச்ச்சிட்டு
போட்ட உடுப்போட ஓடிவந்தோம்
என் பிள்ளைகள் வரல்ல
மருமகள கண்ணல்ல
பேரபிள்ளையும் மனிசியும்
நானும் போய் சேர்ந்தது பள்ளிகூடத்தில
இரத்தவெள்ளமும் சேர்ந்தது எங்களோட
பட்டினியா நாங்கள் ........
விட்டானுகளா அவனுகள்
அங்கயும் போடானுகள் செல்ல...
அதோட என் மனிசிர உயிர் போச்சு
போக முதல் அவ சொன்ன வார்த்தையால
என் பேரபிள்ளைகாய்
நான் வாழ வேண்டியதுமா போச்சு
அதுக்கு பிறகு வாழ முடியல - அங்க
வந்திடோமையா இங்க ,
இராமஸ்வரம் வந்து.....
மூணு வருஷம் ஆகுது - பேசாம
அங்கஏய் இருந்திருக்கலாம் தம்பி ...
என்னத்த பேசி என்ன பயன்
ம்ம்ம் ம்ம்ம் .....
நேரமாச்சு இந்த பொடியன் எங்க
விளையாடுறானோ .....
சரி நான் அப்ப வாரன் வணக்கம் .***
வீரகுட்டியுடன்
டீனு மதி .க