ஐஸ் கப்
குப்பையென நீ தூக்கியெறிந்த
பொருட்களை
பொக்கிசமாக சேகரிக்கும்
என் அலமாரிக்குள்
நீங்காத நினைவாக
கசங்கி கிடந்தது....
எச்சிலை தொட்டிக்குள்
நீ வீசியெறிந்த
ஐஸ் கப்பை
சுரண்டி கொண்டிருந்த
சிறுமியின் பசி.
--- தம்ழ்தாசன் ----

