தமிழ்தாசன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தமிழ்தாசன் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 20-Jan-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 1309 |
புள்ளி | : 254 |
இன்னும் நாம் அறியாத பல அரிய சாதனைகளும் சரித்திரங்களும் இப்பூமியில் குவிந்து கிடக்க..... என்ன இருக்கிறது வியப்பாய் என்னை பற்றி எடுத்து கூற?
விரட்டும் காவல் நடையும் - எம்மை
மிரட்டும் அவரின் தடியும்
ஒடுக்கும் கட்சிகள் படியும் - தோழா
இருட்டும் ஒருநாள் விடியும்.
இருக்கும் மாணவ படையும் - அன்று
ஒடுக்கும் கைகள் ஓடியும்
பிறக்கும் ஈழம் நொடியே - மேலே
பறக்கும் புலிகள் கொடியும்.
ஊழல் செய்யும்
உங்கள் கைகள்
உருட்டுக் கட்டைகள்
எடுக்குமென்றால்
உறவுகள் இழந்த
எங்கள் கோபம்
அழிக்க ஆயுதம்
எடுக்காதா?
அடிக்கும் கும்பலை
அழிக்காதா?
அறவழியில் நாங்க
அணிவகுக்கும் வரையில்
அடட நீங்க
அர்ஜுனன் தாங்க.
உடைக்கபடுகிறது
எங்கள் முதுகெலும்பு
ஏகாதிபத்திய வளர்ப்பு நாய்கள்
எச்சி ருசிக்க....
துர்நாற்றம் வீசும்
தெரு கழிவுகளை
அள்ளி போக
வக்கில்லாத அரசு
வக்கணையாக பேசுகிறது
"அணுகழிவுகளை பாதுகாப்போம்"
நதிகளில்
சாக்காடை கலப்பு...
ஏரி குளமெல்லாம்
அரசு வளாகம்.....
மழைநீர் சேகரிக்கும்
திட்டமில்லை.....
தண்ணீர் தட்டுபாடு
உடனே தனியார்மயம்
இனி
பன்னாட்டு நிறுவனம்
பருக கொடுக்கும்
மூத்திரம்தான்
குடிநீர் நமக்கு.....
சந்தேகத்தின் அடிப்படையில்
கைதான என் அப்பா
காயப்பட்டு துடிக்கிறார்
காவல் நிலைய வாசலில்..
கோடி கோடியாக
ஊழல் செய்தவனுக்கு
என்ன மரியாதை....?
எத்தனை சலுகைகள்...?
எத்தனை உபசரிப
காடு அழிப்புக்கு எதிராக
கருத்து சொல்ல
எனகென்ன கற்பு இருக்கிறது ?
நான் அருந்தும்
ஒவ்வொரு கோப்பை தேநீருக்கு பின்
வனம் அழித்திட்ட வரலாறு உள்ளது.
தாமிரபரணி குருதி நிறைத்த
குளிர்பானம் குடிக்கும் எனக்கு....
என்ன தகுதி இருக்கிறது
தண்ணீர் கோரிய போராட்டத்தில்
தலைமை ஏற்க ?
குவியல் குவியலாக
என் வீட்டு கழிவறை குழாய்கள்
ஆற்றுக்குள்
மலம் கக்குகிறபோது.......
நாசமாய் போகும் நதிகளை
தடுக்க சொல்ல
எனகென்ன தரம் இருக்கிறது?
நான் உட்கொள்ளும் அத்தனை
ஆங்கில மருந்துக்கு பின்னும்
குரங்கு, எலி, நாய் போன்ற
பல்லுயிரிய சிதைவு இருக்கிறது
குருவி இனம் அழிகிறதாம்...
குரல் கொடுக்க சொல