ஈழம் அடையும் வரை

விரட்டும் காவல் நடையும் - எம்மை
மிரட்டும் அவரின் தடியும்
ஒடுக்கும் கட்சிகள் படியும் - தோழா
இருட்டும் ஒருநாள் விடியும்.

இருக்கும் மாணவ படையும் - அன்று
ஒடுக்கும் கைகள் ஓடியும்
பிறக்கும் ஈழம் நொடியே - மேலே
பறக்கும் புலிகள் கொடியும்.

ஊழல் செய்யும்
உங்கள் கைகள்
உருட்டுக் கட்டைகள்
எடுக்குமென்றால்

உறவுகள் இழந்த
எங்கள் கோபம்
அழிக்க ஆயுதம்
எடுக்காதா?
அடிக்கும் கும்பலை
அழிக்காதா?

அறவழியில் நாங்க
அணிவகுக்கும் வரையில்
அடட நீங்க
அர்ஜுனன் தாங்க.

காந்திய வழியை
கைவிடும் நிலையில்
மீசை வைத்த
அலிகள் நீங்க.


காலம் கனியும் வரை
தமிழ் தாகம் தணியாது
ஈழம் அடையும் வரை - எங்கள்
போராட்டம் ஓயாது.

இனியொரு மீனவன்
இனியொரு மாணவன்
காயப்படும் நிலை வந்தால்,
தனியொரு நாடு
தமிழர்கள் வாழ
தேவைப்படும்.

---- தமிழ்தாசன்----

திருச்சி மற்றும் விருதுநகரில் மாணவர்கள் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து எழுதியது.

எழுதியவர் : தமிழ்தாசன் (4-Apr-13, 5:11 pm)
பார்வை : 132

மேலே