நோஞ்சானிடம் அடி வாங்கிய பயில்வான்

ஒரு ஊரில் ஒரு பயில்வான் இருந்தான். ஒரே நேரத்தில் ஆறு, ஏழு பேரை அடித்து வீழ்த்தும் ஆற்றல் பெற்றவன்.

இதில் வேடிக்கை என்னவென்றால், காற்றடித்தால் பறந்து விடும் நோஞ்சான் ஒருவன், இவனைத் தொடர்ந்து அடித்து வந்தான்.

பயில்வான் அவனைத் திரும்ப அடிக்கவில்லை.

ஏன் திரும்பித் தாக்கவில்லை என்பது ஊர் மக்களின் கேள்வியாக இருந்தது.

அந்தப் பயில்வானிடம் இதுபற்றி மக்கள் கேட்டனர். அத்துடன் "திருப்பி அடி, திருப்பி உதை" என்று கூக்குரல் இட்டனர்.

அவர்களைப் பார்த்த பயில்வான் கோபமடைந்தான். "என்னை என்ன ஏமாளி என்றா நினைத்தீர்களா?, நான் யார்?, ஒரு லட்சம் ரூபாய் பந்தயம் கட்டினால் தான் சண்டை போடுவேன், பைசா ஏதும் தராமலேயே ஒருவரை அடி என்கிறீர்களே, பணம் வாங்காமல் சண்டை போட நான் என்ன ஏமாளியா?" என்றான்.

எழுதியவர் : நவீன் (26-Oct-12, 4:44 pm)
சேர்த்தது : dine
பார்வை : 252

மேலே