கோழிக்கறி

சதீஷ் 25 வயது இளைஞன்,முதல் மாத சம்பளம் வாங்கியதற்காக நண்பர்கள் அனைவருக்கும் கோழிக்கறி விருந்தளிக்க முடிவு செய்தான்.சரியாக 7 :௦௦ pm க்கு சதீஷ் தன் புதிய நண்பன் சரவணனுடன் மேட்டுபாளையம் மார்கட் சென்றான்.மழை விடாமல் தூறிக்கொண்டே இருந்தது.

காலில் செருப்பு இல்லாமல் சரவணன் சதிஷுடன் கறிக்கடைக்கு சென்றான்.இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் சதீஷ் சைவம்,சரவணன் அசைவம். ஆனால் இந்த உண்மை சரவணனுக்கு தெரியாது.

சாலை எங்கும் சேரும் சகதியுமாக இருந்தது.சதீஷ் மட்டும் கரிக்கடைகுள் சென்றான்.சரவணன் மார்க்கெட் ரோடையே பார்த்துகொண்டிருந்தான் ,15 நிமிடம் ஆன பிறகும் சதீஷ் கடையில் இருந்து வெளியே வருவது மாதிரி தெரியவில்லை. பள்ளி மாணவர்களும்,வயதானவர்களும்,வாகன வோட்டிகளும் இவனையே(சரவணன்) பார்ப்பது போல் இருந்தது.

சதீஷ் கரிகடைகாரரிடம் "பாவம் இந்த ஜந்துக்கள், இறைவனை பிராத்தனை செய்து வெட்டுங்கள்" என்றான்.சரவணன் இதை கேட்டு சிரித்துகொண்டே "பாவ புண்ணியங்கள் எல்லாம் இங்கு கிடையாது"என்று சொல்லிக்கொண்டே கரிகடைக்குள் சென்றான். பின்னர் மளிகை,அரிசி மற்றும் காய்கறி கடை சென்று வாங்கி முடிக்க 7.45 pm ஆகிவிட்டது .மழை லேசாக விடதொடங்கியது.

சதீஷ் நண்பர்கள் கோழிகறியை சமைத்து முடித்தனர்.சதீஷ் ரசம் மற்றும் தயிர் சாதத்தை அவர்களோடு சேர்ந்து உண்டான்.புதிய நண்பர் சரவணன் சதிஷிடம் என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.சதீஷ் "KFC -Shift Manager " என்று சொல்லி முடித்தான்.

சரவணன் தான் கறிக்கடையில் கூறிய வார்த்தைகளை ஒருமுறை நினைத்து கொண்டே கை கழிவினார் .
-க.பரமகுரு

எழுதியவர் : பரமகுரு க (30-Oct-12, 10:31 pm)
பார்வை : 537

மேலே