முகமூடிகள்

புதுக்கவிதை: முகமூடிகள் 28.10.2112
வே.ம.அருச்சுணன் – மலேசியா

எதைப்பற்றியும்
சிந்திப்பதில்லை
என்ன நடந்தாலும்
கவலைப் படுவதில்லை
வீட்டையும் நாட்டையும்
இனத்தையும் மொழியையும்
கனவிலும் நனவிலும்
வாழ்வையும் வளத்தையும்
கடுகளவும் நினைப்பதே இல்லை.....!

பணத்திற்காக
பதவிகளுக்காக
மானம் மரியாதை
காற்றில் பறக்கவிடும்
குள்ளநரிகள்.......!

வினாடிக்கு வினாடி
மாறும் பச்சோந்திகள்
பணத்துக்கு மட்டும் பாய்விரிக்கும்
முகமூடிகள்!

பொதுமகளுக்கும்
இதுகளுக்கும்
வித்தியாசம் ஏதுமில்லை
கொலை வெறியர்களுக்கும்
இந்த சாக்கடைகளுக்கும்
நோக்கம் ஒன்றே
ஊரையடித்து உலையில்
போடும் கொலைஞர்கள் இவர்கள்
வாயில்லா பூச்சிகளை
மொட்டையடித்து
கரும்புள்ளிகள் குத்திடும்
உடனிருந்தே கொல்லும்
கொடிய நோயர்கள்.....!

இவர்களிடம்
சர்வ சாக்கிரதையாக
இருப்பது மேல்........!


இங்கே நாய்கள்
இருக்கின்றன என்ற
பெரிய அறிவிப்பு
பலகையை வாயிலில் மாட்டுவது
அடுத்த தலைமுறையாவது
சோரம் போய்விடாது
காக்கலாம் அல்லவா......?

நீர்வீழ்ச்சியை
சாக்கடையாக்கியப்
புண்ணியவான்கள்....!


முற்றும்

எழுதியவர் : வே.ம.அருச்சுணன் - மலேசியா (29-Oct-12, 8:02 am)
பார்வை : 425

புதிய படைப்புகள்

மேலே