தமிழினத்தை அழிக்கதுடிக்கும் சிங்கள படை!
சிங்களஇனத்தின் படையில் தமிழ் பெண்களை இணையுமாறும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்றும் ஒலிபெருக்கி மூலம் கிளிநொச்சியில் அறிவித்துள்ள படையினர் தமிழ் வீரியத்தை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கையின் இனக்கலப்பு திட்டம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது
ன்னியில் உள்ள இளம் பெண்களை படையில் இணைந்துகொள்ளுமாறு பல்வேறு கவர்ச்சி கரமான சலுகைகளுடன் படையினர் அறிவித்தல்களை விடுத்துள்ளார்கள்.கிளிநொச்சி உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் உள்ள இளம் பெண்களை படையில் இணையுமாறு பல்வேறு இடங்களில் படையினர் அறிவித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
வாகனங்களில் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற படையினர் குறிப்பாக 18 தொடக்கம் 28 அகவை வரையான பெண்களை படையில் இணைந்துகொள்ளுமாறு அறிவித்துள்ளார்கள்.
பல்வேறு சலுகைகளுடன் உயர்ந்த சம்பளமும்,படையில் இணையும் இளம் பெண்களுக்கு வழங்கப்படும் என ஒலிபெருக்கி ஊடாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
படையில் இணைய விரும்பும் இளம் பெண்கள் பரந்தனில் உள்ள 57 ஆவது பிரிகேட் தலைமையகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
படையில் இணையும் பெண்களுக்கு முப்பதாயிரம் ரூபா சம்பளம் உணவுக்கு பத்தாயிரம்ரூபாவும், வீட்டு வாடகைக்கான செலவு உள்ளிட்ட பல சலுகைகளை படையினர் அறிவித்துள்ளார்கள்.
வன்னியில் உள்ள இளம் பெண்களை இலக்கு வைத்து இந்த அறிவிப்பினை படையினர் விடுத்துள்ளார்கள்.
உண்மையில் சிறீலங்காப்படையில் போதிய சம்பள வசதியின்மை விடுமுறையின்மை காரணமாக பெருமளவான படையினர் தப்பிஓடிய சம்பவங்களும்,தற்போதும் படையினர் பணத்திற்காக குற்றச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான அறிவிப்பினை கிளிநொச்சியில் படையினர் விடுத்துள்ளது தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தினை உண்டு பண்ணியுள்ளது.
அதாவது அடுத்துவரும் தலைமுறை முற்று முழுதாக சிங்கள இனத்தவர்களாக காணப்படவேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் வன்னியில் உள்ள தமிழ் பெண்களை சிங்கள படையில் இணைத்து அவர்களை அங்கு நிலைகொண்டுள்ள சிங்கள படையினருக்கு திருமணம் செய்து வைப்பதன் ஊடாக தனிச்சிங்களத்தை நிலைநாட்டி தமிழ் வீரியத்தை அழித்துவிடும் நோக்கில் படையினர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதில் குறிப்பாக முன்னர் பெருமளவான முன்னாள் போராளிகளை வலுக்கட்டாயமாக சிவில் பாதுகாப்பு படையில் இணைந்துக்கொண்டு அவர்களை உதாரணம் காட்டி தமிழ் யுவதிகளை படையில் இணைக்கும் திட்டத்தினை படையினர் நடைமுறைப்படுத்துகின்றார்கள்.
இதேவேளை வன்னியில் படித்த பெருமளவான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை கொடுக்காமல் அவர்களை சம்பளம் சலுகை என்ற ஆசையினை காட்டி படையில் இணைக்கும் திட்டமாகவும் இது பார்க்கப்படுகின்றது.இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் சிவில் பாதுகாப்பு படையில் முன்னாள் போராளிகளை இணைக்கும் நடவடிக்கையில் தீவிராமக ஈடுபட்;டுவருகின்றார்கள். அதேபோன்று நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றிவருகின்ற ஆசிரியர்களைளும் சிவில் பாதுகாப்பு படையில்இணையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.சிங்கள இனத்தவர்களுக்கு அரச அலுவலகங்கள் பாடசாலைகளில் வேலை வாய்ப்பினை கொடுத்துவரும் சிறீலங்கா அரசு தமிழ் மக்களை இவ்வாறானதொரு வடிவில் படையில் இணைத்து முற்று முழுதாக வடக்கு தமிழர்களை சிங்களவர்களாக மாற்றும் நடவடிக்கையில் சிறீலங்காப்படையினர் முனைப்புடன் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.