காதல் செய்வீர் ............

ஆதலால் காதல் செய்வீர் !
எல்லோரும் காதல் செய்வீர் ....
சாதியையும் சாதிய வெறியையும்
அடியோடு அழிக்கும் வரை காதல் செய்வீர் .....
மனிதம் மலர காதல் செய்வீர்
வீரம் தோன்ற காதல் செய்வீர்
தன்னலம் அழிய காதல் செய்வீர்
இன்று மட்டும் அல்ல என்றுமே காதல் செய்வீர் ....
எல்லோரும் காதல் செய்வீர் ....
காற்றுள்ள வரை காதல் செய்வீர்
உயிர் உள்ள வரை காதல் செய்வீர்
உணர்வுள்ள வரை காதல் செய்வீர்
இன்று மட்டும் அல்ல என்றுமே காதல் செய்வீர் ....
எல்லோரும் காதல் செய்வீர் ....
அன்புக்காய் காதல் செய்வீர்
ஒரு கொடிய நரகாசுரனின் அழிவுக்காய்
காதல் செய்வீர்
ஒரு புதிய சகாப்தத்தின் பிறப்புக்காய்
காதல் செய்வீர்
இன்று மட்டும் அல்ல என்றுமே காதல் செய்வீர் ....
எல்லோரும் காதல் செய்வீர் ....
கற்றவரே காதல் செய்வீர்
உண்மையாய் காதல் செய்வீர்
உறுதியாய் காதல் செய்வீர்
இன்று மட்டும் அல்ல என்றுமே காதல் செய்வீர் ....
எல்லோரும் காதல் செய்வீர் ....
அழிவுக்காய் அல்ல
பிறப்புக்காய் காதல் செய்வீர்
இன்று மட்டும் அல்ல என்றுமே காதல் செய்வீர் ....
எல்லோரும் காதல் செய்வீர் ....