வெளியே காத்திருக்கும் இதயம்

கதவுகள் மூடியே இருப்பதில்லை

திறந்த கதவுகளுக்கு
வெளியே காத்திருக்கும்
இதயம் ...

இன்னும்
தாழிட்ட கதவுகளுக்கு
உள்ளே துடிக்கும்
இதய ஓசை ....

நாகரீகம் தொட்டு

இப்படித்தான்
இதயம் தன்வேலையை
தொடர்கிறது

இன்றுவரை
ஓசையற்ற இதயம்
தனக்கேயான இருத்தலை
இழந்துவிடுவதில்லை?
எனில்
கதவுகள் மூடியே இருப்பதில்லை

எழுதியவர் : ராஜகோபால்.சுப (11-Nov-12, 10:51 am)
சேர்த்தது : rajagopal.supa
பார்வை : 272

மேலே