யார் நீ?
என் இதயத்தை செல்லமாய்த் தட்டியே
"சார், போஸ்ட்" என்கிறாய்!
உன் கடிதத்தை எடுத்து படிக்கும்
முன்னே மின்சாரமாய் மறைகிறாய்!
காதலை அறிமுகப்படுத்திடும் எண்ணமோ?
இல்லை, அலையவைத்திடும் எண்ணமோ ?
சுருங்கிப் போன என் இதயத்தில்
சுடர் விளக்கை ஏற்றிச் சிரிக்கிறாய்!
ஏற்றிய கரத்தை தொட்டுப் பார்த்திட
கண்ணில் சூரியனை காட்டுகிறாய்!
பறித்திட தூண்டிடும் ரோஜாவா நீ?
இல்லை பறித்தால் குத்திடும் முட்களா?
என் கண்கள் மூடின வேளையில்
பறக்கும் முத்தத்தை தருகிறாய்!
உன்னிடம் பேச நான் முயன்றால்
சமிக்ஞையால் என்னை விரட்ட பார்க்கிறாய்!
என்னை நனைத்திட வந்திடும் சாரலா நீ
இல்லை, நனைந்தால் பிடித்திடும் ஜலதோஷமா?
தெரியவில்லை நீயாரென்று எனக்கு!
புரியவைத்திடு சீக்கிரம் எனக்கு!