புனிதமான காதல்
நாங்கள் நதிக்கரை
மணல்மீது நடந்ததில்லை
கடல்கரைதனில் கால்தடம்
பதித்ததில்லை.!
பூக்கள் பூத்துக்குளுங்கும்
பூங்காவிற்க்குள்
புகுந்ததில்லை..!
திரையரங்கின் இருட்டிற்க்குள் முத்தமிட்டுக் கொண்டதில்லை.!
யாருமில்லா இடத்தில்
சந்தித்து பேசிக்கொண்டதில்லை இதுவரை விரல்களால் கூட
தொட்டுக்கொள்ளாமல்
விழிகளால் மட்டும்
தொட்டுக்கொண்டு
அவளுக்குள் நானும்
எனக்குள் அவளும் வாழும்
புனிதமான காதல்தான் இது...!

