எங்கள் உயிர் உயிர் இல்லையா?

பிஞ்சென்றும் பூவென்றும் பிரித்து
அவ் சிறு வண்டு கூட பார்த்து தான் தேன்பருகும்
இங்கு சிங்கள வெறியனுக்கு தமிழ் பிஞ்சின்
இறப்பெனில் சந்தோசம்
அதை செய்த சிப்பாய்க்கு பதவி
உயர்வுகள் தானாக கிட்டும்
பெற்றதாய் முன்னே தந்தையும் தமையனும்,
இறந்து கிடப்பது தான் விதியா?
இதை பார்த்து வெறும் காகித துண்டில் அறிக்கைகள்
எழுதிடத்தான??

உலக..நாடுகளே நீங்கள் கொடுத்த குண்டுகள் இங்கு
அந்த பிஞ்சின் உயிரையும் குடித்துள்ளது
இதுதான் புத்தரின் போதனையா?
வாழப்பிறந்தவரா ஈழ தமிழன் இல்லை
பலராலும் வஞ்சிக்க பிறந்தவரா?

சொல்லி விட்டு கொல்லுங்கள் சாகும் போது-நாங்களும்
தெரிந்து கொண்டு இறப்போம்
ஏன் நாம் கொல்லப்பட்டோம் யாரால் என்று,...
அறியாத என் போன்ற பிஞ்சுதான் உனக்கு குறியென்றால்
நீதான் உலகத்தில் பெரும் வீரன்...
நச்சு வாயுதான் உன் மகத்தான கணையென்றாலும்
காலடியில் எம் பிணம் வீழும் நிச்சயம் ஆனால் ''எம் மண் வீழாது''....

எழுதியவர் : இசை பிரியா ,,,,,,, கவியழகு.m (1-Dec-12, 7:36 pm)
பார்வை : 124

மேலே