கவியழகு மா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவியழகு மா
இடம்:  அறந்தாங்கி ,,, புதுக்கோட்ட
பிறந்த தேதி :  09-Sep-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Oct-2012
பார்த்தவர்கள்:  862
புள்ளி:  72

என்னைப் பற்றி...

"என் மரபணு தமிழர் வழி இல்லை என்றால்
மரணித்து மறுபடி பிறப்பேன் தமிழனாக"



தமிழன் என்று சொல்லாட தலை நிமிர்ந்து நில்லட... என்ற வாய்க்கியத்தை நினைத்தே வாழ்வோம்........

என் படைப்புகள்
கவியழகு மா செய்திகள்
கவியழகு மா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2019 3:07 pm

காத்திருக்கும் பூவே
காவியத்தின் நாவே
பூத்திருக்கும் மனதுள்
குடிகொண்டவன் யாரோ..
பார்த்திருக்கும் பொழுதில்
பகலவனின் கதிர்கள்
உனை சேர்த்து அணைத்ததினால்
ஒளிமலரானாயோ.
வீசீடும் காற்றும் உன்முகம் தழுவியதால்
வாசனை பெற்றதுவோ.
வாரி மகிழ்ந்ததுவோ..
நேசமங்கை நின் நிழலில் நின்றாடும் தமிழ்மங்கை
பாசம் உரைத்தாளோ பாமாலை தந்தாளோ.
உன்வதனம் கண்டீடவே மேகத்துள் போட்டியோ
மேனி உரசலுக்குள் இடிச் சப்தம் கேட்கிறதே.
மின்னலை ஏன் சிறையிட்டாய்.
விட்டுவிடு பாவம் உன்
இதழ்கீற்று புன் சிரிப்பில் கிரங்கிக் கிடக்கிறது....
மகிழ்ந்திரு.........

மேலும்

கவியழகு மா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2019 2:58 pm

கடற்கரை மணலில் பதிந்துடும்
கால் தடங்களை போலே...
ஓர் கணம் நெஞ்சில்
வந்து செல்கிறாய்...
இதழ் கொஞ்சம் பேசும்
புன்னகையை போலே...
நீலகடல் கரையில்
அலைகளோடு கரைந்து போகிறாய்...
மனம் கணக்கும் நினைவுகளோடு
விழி சுமக்கும் கண்ணீராய்
புதைந்து போகிறாய்...
நீ ஓர் தினம் காதல் பூக்கிறாய்
என் மறுதினம்
கனவில் தொலைகிறாய்...
இந்நிமிடம் நீர் நிறைந்திடும் கடலாய்
என் மனம் நிறைந்திடும் நீயாய்
எனக்கென மலர்ந்திடுவாயோ...

மேலும்

கவியழகு மா - கவியழகு மா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2018 9:37 pm

உனக்காகவே.....!



எனது நெஞ்சுக்குள் நரம்புகளுடன் 
பின்னி பிணைந்து 
சந்தைகளின் நரம்பியல் மாற்றத்தை 
தன வசம் கொண்ட 
என் குருதி பிழம்பே...!
உந்தன் உயிரில் தானடி நான் வாழ்கிறேன் ..! 
ஒரு நிமிடம் - நீ மறைந்தாலும்  
எந்தன் ஜீவன் உன் காலடியில் 
காற்றாக மறைந்து போகுமடி
எனது அன்பு காவியமே...! 
அனல் கொண்ட என் மார்புக்குள் 
மாசற்ற மாணிக்கமாய் புதைந்திருக்கும் புவிமலரே...!
நீ என்னவளாக மலர போகும் 
நாட்களை எண்ணியே 
எந்தன் பொழுதை கழிக்கிறேன்...! 
கனவிலும் உந்தன் வரவை 
எதிர்நோக்கும் கவியழகு மா.........

மேலும்

கவியழகு மா - எண்ணம் (public)
14-Mar-2018 9:37 pm

உனக்காகவே.....!



எனது நெஞ்சுக்குள் நரம்புகளுடன் 
பின்னி பிணைந்து 
சந்தைகளின் நரம்பியல் மாற்றத்தை 
தன வசம் கொண்ட 
என் குருதி பிழம்பே...!
உந்தன் உயிரில் தானடி நான் வாழ்கிறேன் ..! 
ஒரு நிமிடம் - நீ மறைந்தாலும்  
எந்தன் ஜீவன் உன் காலடியில் 
காற்றாக மறைந்து போகுமடி
எனது அன்பு காவியமே...! 
அனல் கொண்ட என் மார்புக்குள் 
மாசற்ற மாணிக்கமாய் புதைந்திருக்கும் புவிமலரே...!
நீ என்னவளாக மலர போகும் 
நாட்களை எண்ணியே 
எந்தன் பொழுதை கழிக்கிறேன்...! 
கனவிலும் உந்தன் வரவை 
எதிர்நோக்கும் கவியழகு மா.........

மேலும்

கவியழகு மா - எண்ணம் (public)
18-Nov-2016 11:22 pm

செவ்வந்தி பொழுதில் 
இலைகளுக்கு நடுவே 
தெட்டும் தொடாமலும்  பட்டும் படாமலும் 
சில்லென்ற தென்றல் காற்றாய் 
தெருவோரம் செல்லும் தாவணியே....!

அச்சாரம் போட்டார் போல்
என் அடிமனதை அடிமையாக்கி அழைய விட்டாய்..,!
அனல் காற்றாய் வீசும் 
உன் மூச்சுக்காற்று கூட சுகம் தரும்,
நீ என்னருகே செல்லுகையில்
இருள் சுருளும் இந்நிமிடம் 
ஒளி தரும் தேவதைக்காக காத்திருக்கிறேன்....! 

அன்புன் @கவி@கவி@

மேலும்

கவியழகு மா - காதலாரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Mar-2016 10:46 am

கட்டவிழ்த்த கவிதை
~~~~~~~~~~~~~~~~~

நீ எழுதிய வரிகளில்
எனக்கான எழுத்தை
யாரோ யாசகம் பெற
முற்று புள்ளியில்
முழு முகம் வைக்கிறேன்...
முடிக்கும் நொடியில்
முத்தம் வைத்து மடி...

உரசி நிற்கும் வளையலை
உடைத்து உன் பேர் எழுதி
எனக்கு எடை கல்லாக்கு
கிறுக்கிய வரியில் கள் வாக்கு ..

மேசைக்கு பிறக்கும் போதையென
காற்றடித்து தாழிடும் கதவில்
மீசை தழுவா தருணத்தை
கவிதை துகளால் நிரப்புகிறாய் ...


பென்சில் கீறிய நகத்தில்
வான் சிறை பிடித்த நிலவாய்
சித்திரத்தை சுருட்டி ...உன்
பொட்டுக்குள் புதைக்கிறாய் ..

எது எப்படியேனும்
எதற்காக வந்தாயோ ..
அதை செய் ...ம்ம்ம் ....
மென்

மேலும்

மகிழ்ச்சி தோழர் வரவில் 21-Mar-2016 9:05 am
கவிதைக்கு அழகு சேர்ப்பது போல்... காதலுக்கும் உங்கள் கவிதை அழகு சேர்க்கிறது தோழரே.. 19-Mar-2016 11:35 am
காதலே ஒரு கவிதை தான் ...வரவில் மகிழ்ச்சி நட்பே 18-Mar-2016 10:00 pm
வரவில் மகிழ்ச்சி தங்கச்சி 18-Mar-2016 9:59 pm
கவியழகு மா - கவியழகு மா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2015 9:51 am

அந்தி பொழுதில் ஆகச வானில்
எந்தையும் என் மனதையும் திருட....!
கணநேரமும் கவியமுதை உட்கொண்டபடியே
என்னை தொடரும் உந்தன் நினைவுகள்.....!

நீயே, என் அன்பின் உணர்வையும்
யான் உன் மீது கொட்ட காதலின் பரிசத்தையும்
என் விழிகள் இடைவிடாது - உன்
வரவையே எதிர்நோக்கிறது என்றுனர்வாயோ...!

காதலின் மதி மயக்கத்தில்
கள்வா உந்தன் பாதம் பணிந்தேன்...!
உள்ளுணர்வில் மகுடம் சூட்டிய மன்னவா
எந்தன் மனதை கொள்ளை கொண்ட என்னவா...!
......தொடரும்.

மேலும்

தங்களின் தோழமைக்கு மிக்க நன்றி தோழா... 27-Aug-2015 10:17 pm
உங்கள் பாரடுதலுக்கு மிக்க நன்றி...@பிரியா 27-Aug-2015 10:16 pm
தோழி மீனா அவர்களுக்கு மிக்க நன்றி... 27-Aug-2015 10:15 pm
சூப்பர் 18-Jun-2015 4:51 pm
கவியழகு மா - கவியழகு மா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2014 10:26 pm

கவிதை எழுத
நான் கவிஞன் அல்ல....!
உன்னை பற்றி காவியம் பாட
நான் பாடகன் அல்ல.....!
உன்னை ஓவியதில் தீட்ட
நான் ஓவியனும் அல்ல.....!
உன்னுடைய காதலன்...........

நான் காகிதத்தில் கிறுக்கியது கவிதையாக
உன் கண்களுக்கு தெரியவில்லை என்றாலும்
நான் உன் மீது கொண்ட காதலின் ஆழம் தெரிந்தாலே போதும்
என் குறல் இனிமை இல்லை என்றாலும்
என் இதயதில் இருப்பவள்
நீ தான் என்று நீ உணர்ந்தாலே போதும்
நான் வரைந்த ஓவியம்
உன்னை போல் இல்லாமல் இருக்கலாம்
ஆனால் என்னுள் இருந்து
என்னை இயக்குபவள் நீதனடி.............

மேலும்

என் கவிதையில் காதல் வரிகள் தவழலாம் ஆனால் என்னுள் காதல் அரும்பாது தோழமையே................ 03-Aug-2014 12:27 pm
காதல் வரிகள் தவழ்கிறது..! 01-Aug-2014 11:38 pm
கவியழகு மா - kiranprasath அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2014 11:20 pm

நெஞ்சில் தோன்றும் நினைவுகள்..
நினைவுகளின் பிம்பங்களாய் உன் முகம் மாட்டும்..
நினைத்த எடுப்பில் வந்து விடுவதில்லை அழுகை..
நினைவுகளின் வருடலிலேயே
எட்டிப் பார்த்து விடுகிறது எனக்கு..
நீண்ட நெடுந்தொலைவு நடந்திட பயக்கிறேன்
நின் முகம் காண மட்டும் நடையாய் நடந்த நினைவு..
ஏன் எதற்கு என்று தெரியாமல் சிரிக்கத் துனிகிறேன்
உன் முகபாவங்களின் குழந்தைத்தனத்தின் நினைவு..
மழை மாலைப் பொழுதுகளில் எல்லாம்
உன்னோடு என் சாலையோர தேநீர் நினைவு..
கடற்கரையின் மணல்வெளியில் கால் பதிக்க நடுங்குகிறேன்
கை கோர்த்து பலமணி கடத்திய நினைவு..
ஜாமத்தில் விழித்திட மறுக்கிறேன்
கனவுலகிலேயே வாழ்ந்து மடிந்திட அற்ப்பாசை..

மேலும்

Very super ........really I felt it........ 26-Jul-2014 8:14 am
காதலாரா அளித்த படைப்பை (public) அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
25-Apr-2014 12:37 am

கண்ணீர் வழி
மனம் துவைக்க

இதழை இறுக்கி
சிரிப்பை நறுக்கி
இதயம் சுருக்கி

கொடுமைகளுக்கு
கூரை கட்டிய
கைகள்
கண்ணீர் துடைக்க

உள்ளத்தின் கனம்
கணத்தில்
கரைந்து
நுரையாய் உடைய
தூளானது
துன்பங்கள்

அவ்வழியில்
அன்பிற்கு
அடித்தளம் அமைத்து

அனுபவத்தை
அடுக்கி வைக்கிறேன்
அடுத்த முறை ரசிப்பேன்
கனவின்
உயரம் பார்த்து

துன்பத்தில்
விட்டு சென்ற வேதனைகள்
வெக்கம் இல்லாமல்
வேண்டுதல் வைக்கும்
அன்பின் அழகை
அள்ளி தர

கொடுத்து கொடுத்து
குறை தீர்ப்பேன்
எனது குறையை
எண்ணாமல்

இன்பம் இல்லா
இதயம் - அதையே
தேடும் என்றும்

---இராஜ்குமார்

மேலும்

வேலைபளுவால் சிறிது நாள் தினம் இணையத்துள் வர இயலவில்லை தோழா 12-Aug-2014 6:07 am
நீண்ட நாட்களுக்கு பின் கவி படித்து கருத்து தந்ததில் மிக மகிழ்ச்சி தோழரே 03-Jun-2014 12:56 am
கொடுத்து கொடுத்து குறை தீர்ப்பேன் எனது குறையை எண்ணாமல் // அருமை நண்பரே 02-Jun-2014 11:52 pm
நீண்ட நாட்களுக்கு பின் கவி படித்து கருத்து தந்ததில் மிக மகிழ்ச்சி தோழமையே 31-May-2014 3:19 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
பா.மணி வண்ணன்

பா.மணி வண்ணன்

கரம்பக்குடி
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (15)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
Santha kumar

Santha kumar

சேலம்
user photo

praba33

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (15)

Rajankhan

Rajankhan

வேடந்தாங்கல்
சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI
sarabass

sarabass

trichy

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே