கட்டவிழ்த்த கவிதை - காதலாரா

கட்டவிழ்த்த கவிதை
~~~~~~~~~~~~~~~~~

நீ எழுதிய வரிகளில்
எனக்கான எழுத்தை
யாரோ யாசகம் பெற
முற்று புள்ளியில்
முழு முகம் வைக்கிறேன்...
முடிக்கும் நொடியில்
முத்தம் வைத்து மடி...

உரசி நிற்கும் வளையலை
உடைத்து உன் பேர் எழுதி
எனக்கு எடை கல்லாக்கு
கிறுக்கிய வரியில் கள் வாக்கு ..

மேசைக்கு பிறக்கும் போதையென
காற்றடித்து தாழிடும் கதவில்
மீசை தழுவா தருணத்தை
கவிதை துகளால் நிரப்புகிறாய் ...


பென்சில் கீறிய நகத்தில்
வான் சிறை பிடித்த நிலவாய்
சித்திரத்தை சுருட்டி ...உன்
பொட்டுக்குள் புதைக்கிறாய் ..

எது எப்படியேனும்
எதற்காக வந்தாயோ ..
அதை செய் ...ம்ம்ம் ....
மென் கவிதையை
மென்று தின் ...
ஊன் கவிதையை
கொன்று உண்...
வீண் கவிதையை
வென்று செல் ..

- காதலாரா

எழுதியவர் : காதலாரா ( இராஜ்குமார் ) (18-Mar-16, 10:46 am)
பார்வை : 134

மேலே