அவளின் ஏக்கம்
அந்தி பொழுதில் ஆகச வானில்
எந்தையும் என் மனதையும் திருட....!
கணநேரமும் கவியமுதை உட்கொண்டபடியே
என்னை தொடரும் உந்தன் நினைவுகள்.....!
நீயே, என் அன்பின் உணர்வையும்
யான் உன் மீது கொட்ட காதலின் பரிசத்தையும்
என் விழிகள் இடைவிடாது - உன்
வரவையே எதிர்நோக்கிறது என்றுனர்வாயோ...!
காதலின் மதி மயக்கத்தில்
கள்வா உந்தன் பாதம் பணிந்தேன்...!
உள்ளுணர்வில் மகுடம் சூட்டிய மன்னவா
எந்தன் மனதை கொள்ளை கொண்ட என்னவா...!
......தொடரும்.