என் நினைவில் அவள்

கடற்கரை மணலில் பதிந்துடும்
கால் தடங்களை போலே...
ஓர் கணம் நெஞ்சில்
வந்து செல்கிறாய்...
இதழ் கொஞ்சம் பேசும்
புன்னகையை போலே...
நீலகடல் கரையில்
அலைகளோடு கரைந்து போகிறாய்...
மனம் கணக்கும் நினைவுகளோடு
விழி சுமக்கும் கண்ணீராய்
புதைந்து போகிறாய்...
நீ ஓர் தினம் காதல் பூக்கிறாய்
என் மறுதினம்
கனவில் தொலைகிறாய்...
இந்நிமிடம் நீர் நிறைந்திடும் கடலாய்
என் மனம் நிறைந்திடும் நீயாய்
எனக்கென மலர்ந்திடுவாயோ...

எழுதியவர் : கவியழகு மாதவன் (23-May-19, 2:58 pm)
சேர்த்தது : கவியழகு மா
Tanglish : en ninaivil aval
பார்வை : 395
மேலே