சுந்தரியே குணவதியே நீ

நிலவுபோல் முகத்தால் பூர்ணிமா அவள்
கொடிபோல் இடையால் மலர்க்கொடி அவள்
கயல்போல் கண்ணிரண்டு உடையாள் மீனாக்ஷி i
கார்மேகம்போல் நீண்ட கருங்குழலால் கார்குழலாள்
அழகு நடையால் கன்னியவள் அன்னநடையாள்
அவள் ஆடினால் ஆடிவரும் மயில்தான் மயூரி
என்னை எப்போதும் மோகிப்பவள் என்னுடன்
துணையாய் துணைவியாய் காதலியாய் மோகினி
இப்படி குணங்கள் ஒவ்வொன்றிலும் சுந்தரியாய்
திகழ்வதால் இவள் என்றும் எனக்கு குணவதி சுந்தரி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-May-19, 1:19 pm)
பார்வை : 78

மேலே