விட்டு விடு

காத்திருக்கும் பூவே
காவியத்தின் நாவே
பூத்திருக்கும் மனதுள்
குடிகொண்டவன் யாரோ..
பார்த்திருக்கும் பொழுதில்
பகலவனின் கதிர்கள்
உனை சேர்த்து அணைத்ததினால்
ஒளிமலரானாயோ.
வீசீடும் காற்றும் உன்முகம் தழுவியதால்
வாசனை பெற்றதுவோ.
வாரி மகிழ்ந்ததுவோ..
நேசமங்கை நின் நிழலில் நின்றாடும் தமிழ்மங்கை
பாசம் உரைத்தாளோ பாமாலை தந்தாளோ.
உன்வதனம் கண்டீடவே மேகத்துள் போட்டியோ
மேனி உரசலுக்குள் இடிச் சப்தம் கேட்கிறதே.
மின்னலை ஏன் சிறையிட்டாய்.
விட்டுவிடு பாவம் உன்
இதழ்கீற்று புன் சிரிப்பில் கிரங்கிக் கிடக்கிறது....
மகிழ்ந்திரு.........

எழுதியவர் : கவியழகு மாதவன் (23-May-19, 3:07 pm)
சேர்த்தது : கவியழகு மா
Tanglish : vittu vidu
பார்வை : 211

மேலே