மெல்லத் தென்றல் இசைக்கட்டுமே

கழனி ஏட்டுனிலே
கிழவன் பாட்டுனிலே
பசுந்தென்றல் இசைக்கையிலே
எழும் ராகம் அந்த வானம் தொட்டு
எழில்மேகம் மெல்ல பொழியும் மொட்டு
பூக்கும் இந்த பூமி தொட்டு
மெல்ல தென்றல் இசைக்கையிலே என்றன் மனமையிலும் ஆடுதடி பூங்குயிலே... பூங்குயிலே...

ஆற்றங் கரையினிலும்
ஊற்றின் அருகினிலும்
நாற்றின் நடுவினிலும்
ஆழியீந் நரலையிலும்
தண்தென்றல் இசைக்கையிலே
என்றன் மனமையிலும் ஆடுதடி
பூங்குயிலே... பூங்குயிலே...

பூவின் இதழினிலும்லும்
புறாவின் இறகினிலும்
தாவும் கிளையினிலும்
தளிரும் இலையினிலும்
பைந்தென்றல் இசைக்கையிலே என்றன் மனமையிலும் ஆடுதடி பூங்குயிலே... பூங்குயிலே...

ஓடும் நதியிடையே உறையும் பனியிடையே உலவும் முகிலிடையே வெண்தென்றல் இசைக்கையிலே என்றன் மனமையிலும் ஆடுதடி பூங்குயிலே... பூங்குயிலே...

எழுதியவர் : கல்லறை செல்வன் (23-May-19, 3:54 pm)
சேர்த்தது : கல்லறை செல்வன்
பார்வை : 249

மேலே