இன்பம் இல்லா இதயம் - அதையே தேடும் என்றும் ---இராஜ்குமார்---
கண்ணீர் வழி
மனம் துவைக்க
இதழை இறுக்கி
சிரிப்பை நறுக்கி
இதயம் சுருக்கி
கொடுமைகளுக்கு
கூரை கட்டிய
கைகள்
கண்ணீர் துடைக்க
உள்ளத்தின் கனம்
கணத்தில்
கரைந்து
நுரையாய் உடைய
தூளானது
துன்பங்கள்
அவ்வழியில்
அன்பிற்கு
அடித்தளம் அமைத்து
அனுபவத்தை
அடுக்கி வைக்கிறேன்
அடுத்த முறை ரசிப்பேன்
கனவின்
உயரம் பார்த்து
துன்பத்தில்
விட்டு சென்ற வேதனைகள்
வெக்கம் இல்லாமல்
வேண்டுதல் வைக்கும்
அன்பின் அழகை
அள்ளி தர
கொடுத்து கொடுத்து
குறை தீர்ப்பேன்
எனது குறையை
எண்ணாமல்
இன்பம் இல்லா
இதயம் - அதையே
தேடும் என்றும்
---இராஜ்குமார்