புரிகிறதா-வித்யா

வார்த்தைகளை கூராக்கி
ஒவ்வொருமுறை என்னிதையம்
குத்தும் போதும்.................
கண்ணீரை சேமித்து
காதல்வன ஒட்டகமாய்
உயிர்வாழ்கிறேன்...........
திருடுபோன புன்னகைகளை
எல்லாம் தேடிபிடித்து
அணிந்து கொள்கிறேன்........!

கூட்டி, கழித்து
பெருக்கி, வகுத்து
ஏதோ ஒரு விடையை
காட்டுகிறாய்..........!
பத்து எண்களில்
பூஜ்ஜியம் நானென அறியாமல்....!

வெறுமை மிஞ்சிய
நொடிகளில் ஏதோ
ஒரு தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு
உன்னை நினைக்கிறேன்........
கண்கள் கனல் கக்க
நினைவு நொடிகள்
பொசுங்கி கொண்டே
எனை சாம்பலாகுகிறது..........!

நாளைய பொழுதுகள் உன்
வெறுப்பை அதிகபடுத்தலாம்......
என் நாளைய காதல்
இன்றைவிட அதிகமாகும்.......
நாளை மறுநாளைவிட
சற்றே குறைந்திருக்கும்..............!

உன் வார்த்தைகள்
இதயத்தில் பட்டு
எதிரொலிக்கும் போது
கோபம் கொள்ளும் மூளையை
கருணைக்கொலை செய்கிறேன்.....!

அனுதினமும்
ஆராதனைகள்............
பிடிவாதம் கொண்டு
உயிர்வாங்கும்
உன்காதலுக்கு.......!

கன்னம் நனைக்கும்
கண்ணீர்........ காலச்சிறகுகளை
தொற்றிக்கொண்டு
காற்றில் கரைந்திடும்......
வழித்தடம் தொலைத்து
கவலைகள் புதைத்திடும்
எனும் நம்பிக்கையில்.........!

எழுதியவர் : வித்யா (25-Apr-14, 1:19 am)
பார்வை : 184

மேலே