தமிழன் வாழ்வு
பொல்லாப் புகழ்பெற்ற பொய்யின் உறைவிடமே.
எல்லாம் தெரிந்ததுபோல் எங்கேயும் நடிப்பாரே
கல்லா திருந்தாலும் கற்றோரை மிஞ்சியே
உள்ளதை மாற்றி உலகத்தை ஏய்ப்பதற்கே
பள்ளங்கள் பறித்திருக்கும் பார்.
சமுதாயம் கொண்டிருக்கும் சத்தியத்தின் வாயில்
அமுதாய் விஷமூற்றி அஞ்சாமல் கொல்லும்
கொடும்பாவிக் கூட்டம் குடிகொண்ட நாட்டின்
பொதுநலத்தில் வேர்விட்ட புல்லுருவி தன்னை
எடுத்தெறிந்து விட்டால் எடுப்பு.
அச்சங்கள் நாட்டில் அனவரதம் உண்டென்றால்
உச்சங்கள் என்னும் உள்நோக்கக் கொள்கையால்
எச்சங்கள் செய்து எளியவர் வாழ்வை
மிச்சங்கள் வைக்கா மிருகங்கள் போன்று
துச்சமாய் நாளும் துவம்சம் செய்கின்ற
இச்சைகள் கொண்டோர் இருக்கும் வரைக்கும்
தமிழனவன் வாழ்வு தளப்பு (தளப்பு -கேடு)